இளைஞர் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கிய போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு 18 வயதான இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை விட்டு இறங்கிய அவர் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக்கண்ட மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சிகிச்சை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவர் எதற்காக காரை விட்டு கீழே இறங்கினார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.