காரில் கடத்தி சென்ற ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்ததாஸ் வருவாய் ஆய்வாளர் ராஜகுமார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவை நோக்கி வேகமாக சென்ற சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கார் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.
அப்போது அச்சத்தில் கார் ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் காரில் சிறு சிறு மூட்டைகளாக 700 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.