ஜப்பானிய கோடிஸ்வரருக்கு பெண் வடிவில் முடிவு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கோடீஸ்வரரான கோசிகி நோசாக் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கான சுய சரிதையில் தன்னுடைய ஆசையை எழுதியுள்ளார். அதாவது அவருக்கு கார்கள் மீதோ, வீடுகள் மீதோ ஆர்வம் கிடையாது, அழகிய பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது தான் இவரது ஆசை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இவர் சுமார் 20 மில்லியன் அளவிலான பவுண்டுகளை அழகான பெண்களுடன் தனது நேரத்தைக் கழிக்க செலவு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படி 4,000 இளம்பெண்களை மயக்கி தன்னுடைய வலையில் சிக்க வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர் விமான நிலையத்தில் வைத்து அழகான சகி சூடோ என்ற பெண்ணை பார்த்ததால் அவரை அடைய வேண்டுமென்று ஆசை எழுந்துள்ளது.
இந்த நிலையில் நோசாக் திட்டம்போட்டு கீழே விழுவது போல் நடித்து, சகி காப்பாற்ற ஓடி வந்ததால் இருவரும் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமணம் நிறைவு பெற்ற ஒரு சில மாதங்களிலே அவர் உயிரிழந்தார். இதற்கிடையே சகி இணையதளத்தில் மருந்தை கொடுத்து எவ்வாறு கொலை செய்வது என்பதை தேடியது கண்டறியப்பட்டது. அவ்வாறு தேடிய மருந்தை சகி சூடோ பானத்தில் கலந்து நோசாகியைப் குடிக்க வைத்து கொலை செய்திருக்கலாம் என்கின்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சகியை கைது செய்தனர்.