தி.மு.க நிர்வாகிகளின் இரண்டு கார்களை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் தி.மு.க நிர்வாகிகள் இரண்டு கார்களில் வந்து அந்த பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று பணம் அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் திமுக நிர்வாகிகளின் கார்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தனர். அதன்பின்னர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதன்பிறகு திமுக நிர்வாகிகளை பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.