கர்நாடகா மாநிலத்திலிருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுண்டகிரி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.