நடிகர் அஜித் வலிமை திரைப்படத்திற்குப் பின் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “ஏ.கே. 61” படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக் கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதனிடையில் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் லடாக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அஜித் லடாக்கிலுள்ள கார்கில்போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.