Categories
ஆன்மிகம் விழாக்கள்

கார்த்திகை திருநாளன்று… வீட்டில் இப்படி விளக்கேற்றுங்க… நடக்குறத பாருங்க…!!!

கார்த்திகை திருநாளன்று, வீட்டில் விளக்கேற்றும் முறைகளும், அவற்றின் பலன்களையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

தமிழ் மாதமான எட்டாவது மாதம் தான் கார்த்திகை. அம்மாதத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைத்துள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவன், அக்னியில் உதித்த ஆறுமுகன், காக்கும் கடவுளான விஷ்ணு, என அனைத்துக்கும் ஏற்றதாக கார்த்திகை திகழ்கிறது. ஆதலால் கார்த்திகை மாதம், பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது தான்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நம் நாட்டில் கார்த்திகை தீப வழிபாடானது, 3 நாட்கள் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா நவம்பர் 29 (கார்த்திகை 14) கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை விளக்கின் தத்துவம் :

தீபம் என்பது தன்னை கரைத்து மற்றவர்களுக்கு ஒளி தருகிறது.”பிறர் நலம் பேண, தன் உயிரை தியாகம் செய்தல்” என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.

தீபம் ஏற்றும் முறை :

  • திருக்கார்த்திகை திருநாளில், நாம் கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மை உண்டாகும்.
  • அதே மேற்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கிவிடும்.
  • வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.
  • ஆனால் எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது.

தீபத்திருநாளன்று, குறைந்தது 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கை வைத்து, அதில் தீபம் ஏற்றினால், மிகவும்  நல்லது. கார்த்திகை திருநாளன்று, நெல் மற்றும் பொரியை நைவேத்தியமாக இறைவனிடத்தில் படைத்தால் சிவனருள் முற்றிலும் கிடைக்கும்.

  • ஒரு முகம் ஏற்றினால்        – நினைத்த காரியம் உண்டாகும்.
  • இரு முகம் ஏற்றினால்        – குடும்பம் சிறப்பாகும்.
  • மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் முற்றிலும் நீங்கிவிடும்.
  • நான்கு முகம் ஏற்றினால் – செல்வ செழிப்பு மென்மேலும் பெருகும்.
  • ஐந்து முகம் ஏற்றினால்     – சகல நன்மைகளும் கிட்டும்.

இத்தனை சிறப்பு அம்சம் வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டு வந்தால் வாழ்வில் வளம் பெறுவோம்.

வீட்டில் கார்த்திகை தீபத்தை ஏற்றி வழிபடுபவர்கள், தங்கள் இருப்பிடங்களை சுத்தம் செய்து மாலை நேரம், வீட்டு வாசலில் கோலமிட்டு, சிறிய அகல் விளக்குகளில் நெய், நல்லெண்ணெய் மற்றும் பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி இறைவனை வழிபடலாம். அதே போல் கார்த்திகை மாதம் முழுவதும் தங்களது வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள், கார்த்திகை திருநாளின் போது மற்றும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்திற்கு மிகவும் நல்லது.

Categories

Tech |