சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கிரு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு பனைஒலை தென்னகீற்று ஆகியவை கொண்டு சொக்கபனை அமைக்கப்பட்டு கற்பூரம் கொண்டு கொளுத்தபட்டது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று வழிபட்டனர். திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலைகள் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருக்கோவில் எதிரேயுள்ள பச்சரி மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன. மூன்றாம் பிரகாரத்தில் ஆயிரக்கணக்கான தீபங்கள்ஒரே ஏற்றப்பட்டன. மூன்றாம் பிரகாரத்தில் தீப ஒளியில் மின்னியது திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.