Categories
ஆன்மிகம் இந்து திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

கார்த்திகை தீப திருவிழா- அண்ணாமலையார் கோவிலில் ரூ 2.25 கோடி வசூல்…!!

கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில்  உண்டியல் காணிக்கையாக ரூ 2.25 கோடி வசூலாகி உள்ளது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப தீருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்றது. இந்த தீப திருவிழாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று காலை கோவிலில் அமைந்துள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள உண்டியல்கள் அனைத்தும் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது.

Image result for Thiruvannamalai"

உண்டியல்கள் கணக்கிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்களும், வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டு இருந்தனர். உண்டியலில் 2,25,62,155 ரூபாய் ரொக்க பணமும், 292 கிராம் தங்கமும், 2,684 கிலோ கிராம் வெள்ளியும் வசூலாகியுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Categories

Tech |