பாண்டியராஜன் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் 80களில் இருந்து இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த பாண்டியராஜன் தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படம் காமெடி கலந்த திகில் திரைப்படமாக உருவாகின்றது. படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்குகின்றார்.
மேலும் காமெடி நடிகர் செந்திலும் இத்திரைப்படத்தில் நடிக்கின்றார். இப்படமானது கிராமத்தில் பயந்து நடுங்கும் ஊர் மக்களை பங்களாவின் உரிமையாளரான பாண்டியராஜன் எப்படி காப்பாற்றுகின்றார் என்பதே படத்தின் கதையாகும். தற்போது படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் விரைவில் படம் குறித்த தகவல் வெளியாகும் என சொல்லப்படுகின்றது.