கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு மகான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .
"மகான்"#Chiyaan60 is #MAHAAN https://t.co/66ym8g6E2o#மகான் #Chiyaan #DhruvVikram @7screenstudio @lalit_sevenscr @music_santhosh @kshreyaas @vivekharshan @actorsimha @SimranbaggaOffc @DineshSubbaray1 @sherif_choreo @kunal_rajan @Stylist_Praveen @tuneyjohn @vanibhojanoffl pic.twitter.com/thBFRGKQkh
— karthik subbaraj (@karthiksubbaraj) August 20, 2021
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘மகான்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.