கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதனிடையே தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என தகவல் பரவி வந்தது. மேலும் தனுஷ் தானே இந்த படத்தை இயக்கி நடித்து வருவதாகவும், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
#D43 final schedule progressing at Hyderabad.@dhanushkraja @karthicknaren_M pic.twitter.com/PvLGuWEgy4
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 10, 2021
ஆனால் தனுஷ், கார்த்திக் நரேன் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இந்த படத்தை கார்த்திக் நரேன் தான் இயக்கி வருகிறார் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக D43 படப்பிடிப்பு தளத்தில் தனுஷுக்கு இயக்குனர் கார்த்திக் நரேன் காட்சியை விளக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.