நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள சர்தார் படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சர்தார் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சிம்ரன் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.