நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான சுல்தான் திரைப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் .
இந்த படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி சுல்தான் படத்தின் தெலுங்கு பதிப்பு ஓடிடி-யில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் சுல்தான் தமிழ் பதிப்பின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.