Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… ரிலீஸ் தேதியில் மாற்றமா?… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’ . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுல்தான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு அவரது நண்பர்கள் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என்னுடைய சில நண்பர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுல்தான் படத்தின் ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. திரையரங்குகளில் படம் பார்க்க வருபவர்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து படம் பார்க்க வருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |