முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி ‘விருமன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் .
Happy to have started our next Production titled #Viruman with an auspicious Poojai today 🪔@Karthi_Offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @Suriya_offl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial @selvakumarskdop @ActionAnlarasu @jacki_art @U1Records pic.twitter.com/M4ijxNTEQB
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 6, 2021
இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று விருமன் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் கார்த்தி, முத்தையா, சூர்யா, இயக்குனர் ஷங்கர், அதிதி ஷங்கர், இயக்குனர் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.