Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் 25-வது படம்…. பூஜையுடன் தொடக்கம்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த வருடம் வெளியாகிய விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதையடுத்து கார்த்தி ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25-வது படமாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு “ஜப்பான்” என பெயரிட்டுள்ளனர்.

கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதன்முறையாக நடிக்க இருக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றிபெற்ற நடிகர் சுனில் முக்கியமனா  வேடத்தில் நடிக்கிறார். அதன்பின் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

ஜப்பான் திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. கூடியவிரைவில் தூத்துக்குடியில் முதற்கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. மிகப் பெரும் பொருட் செலவில் தயாராக இருக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்டநாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். இதனிடையில் விரைவில் இந்த படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |