சர்தார், பீஸ்ட் ஆகிய படங்களின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஸ்டுடியோவில் தான் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பின் இடையே கார்த்தி நடிகர் விஜய்யை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் கார்த்தி சர்தார் பட கெட்டப்பில் இருந்ததால் விஜய்யால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இதன்பின் கார்த்தியே விஜய்யிடம் சென்று பேசியுள்ளார். அப்போது ஆச்சரியமடைந்த விஜய் கார்த்தியையும், சர்தார் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.