செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஒரு வருடம் இந்த தடுப்பூசி குறித்த மிக சிறப்பான பணி நடைபெற்று இருக்கிறது. இதை மேலும் விரிவாக்கி, வேகப்படுத்தி, ஊடகங்கள் நியாயமான நல்ல விஷயங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, 100 சதவீம், இன்று பிறந்த குழந்தைகளுக்கு கூட தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்கின்ற வகையில் நாம் இந்த தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொரோனாவிலிருந்து பாஜக அரசு மிக சரியான முறையில் பாதுகாத்து இருக்கிறது என்பதற்காக தான் இந்த சந்திப்பு.
ஜீ தொலைக்காட்சி தொடர்பாக அந்த தொடர்புள்ள துறைக்கு எல்.முருகன் அவர்கள் எங்க மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை தொடர்பு கொண்டு இருக்கிறார். அதுகுறித்து அண்ணாமலை அவர்கள் மாநில தலைவர் அவருடைய ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். நாம் சொல்வதெல்லாம் இதுதான் நடவடிக்கை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை மற்றவர்களை போல உள்ளே புகுந்து அடிப்பது கொள்ளுத்துவது இதெல்லாம் இல்ல.
அது வன்முறை, அதுதான் ஊடக சுதந்திரத்தை பறிப்பது அதுதான் விஷயம். சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் அந்த துறை சார்ந்த நடவடிக்கை கண்டிப்பாக அது எடுத்துதான் ஆகவேண்டும், ஏனென்றால் எதைவேண்டுமானாலும் சொல்லி குழந்தைகளை வந்து தூண்டி விடுவது என்பது தவறான விஷயம். யார் மீது நடவடிக்கை எடுப்போமோ, அவர்கள் மீது எடுப்போம், அப்போ அவருக்கு தெரியும்.
அவரை மாதிரி பாண்டிச்சேரியில் ஒருவர் டுவிட் போட்டதுக்கு அவரை தூக்கி கைது செய்த மாதிரி செய்வாங்களா ? கார்த்தி சிதம்பரத்துக்கு இந்த ஊடக சுதந்திரம் குறித்து…… அவங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை என்னன்னு தெரியல. ஏனென்றால் சட்டப்படி அவர்கள் நடந்ததே கிடையாது. கார்த்தி சிதம்பரம் ஆகட்டும், சிதம்பரம் ஆகட்டும், சட்டப்படி நடக்க தெரியாதவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றால் என்ன என்று புரியாத நியாயம்தானே.
இன்றைக்கும் கூட அவர்கள் கொடுத்த வழக்கில் பாவம் நிறைய பேர் கோர்ட்டுக்கு போய்கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்களை விமர்சித்தால் அடிமைப்பெண் படத்தில் வருவதுபோல ஏன் என்றால் சிறைவாசம், ம்ம் என்றால் வனவாசம் என்ற மாதிரி காங்கிரஸ் கட்சியினுடைய வழக்கம். ஊடகத்தினரை மிரட்டுவது அடிப்பது. திமுகவினுடைய வழக்கம் ஊடகத்தில் ஊடே புகுந்து கொளுத்துவது, கொலை செய்வது. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் என்ன தவறு என தெரிவித்தார்.