பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சர்தார் இந்த படத்தில் ராசி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஸ்கான், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். சத்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சர்தார் படம் பற்றி ரெஜிஷா விஜயன், லைலா மற்றும் மாஸ்டர் ரித்விக் போன்றோர் பேட்டியளித்துள்ளனர். இதில் ரெஜிஷா விஜயன் பேசும்போது, கர்ணன் படத்தின் ரிலீஸ்க்கு முன்பு வெளியான தட்டான் தட்டான் பாடலை கேட்டபின் பிஎஸ் மித்ரன் சார் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சர்தார் படத்தின் கதையை கூறினார் அந்த கதையை கேட்ட பின் அந்த கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் இந்த கதை இப்போது வரைக்கும் நாம் விவாதிக்காத ஒரு கதை.
அதே சமயம் ரொம்ப ஜாலியா, கமர்சியலா தியேட்டர்ல பாக்குற மாதிரி இந்த படத்தை எடுத்து வைத்திருக்கின்றோம் எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ஒரு கதாபாத்திரம். படத்தை அனைவரும் பாருங்கள் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது பற்றியும் அந்த அனுபவம் பற்றியும் ரிஜிசா விஜயன், லைலாவிடம் கேட்டபோது இருவரும் பொதுவான கருத்தையே தெரிவித்துள்ளனர். கார்த்தியும், சூர்யாவும் மிகவும் அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், கண்ணியமானவர்கள் என கூறியுள்ளனர்.