Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தி செயலால் கண்கலங்கிய சூர்யா”…. இணையத்தில் பரவும் வீடியோ….!!!!!

நடிகர் கார்த்தி குறித்து சூர்யா பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றார்கள். சூர்யா தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் கார்த்தி நடிப்பில் நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் பழைய பேட்டி ஒன்று தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. அதில் சூர்யா தனது தம்பி கார்த்தி பற்றி பேசியுள்ளார்.

கார்த்தி தனது படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றபொழுது ஒரு அண்ணனாக சூர்யா எதுவும் செய்யவில்லை என ஃபீல் செய்தாராம் .கார்த்தி வெளிநாட்டில் கஷ்டப்படுவதை அவரின் அம்மா மூலம் கேட்டறிந்த சூர்யா மிகவும் வருத்தப்பட்டாராம். அப்போது கார்த்தி தனது அண்ணன் சூர்யாவிற்கு மெயில் செய்தாராம். அதில் கூறியதாவது, சூர்யாவை பார்த்து தான் இதுவரை அனைத்தையும் செய்து வந்ததாகவும் உங்களின் பாராட்டிற்காக தான் ஏங்கியதாகவும் ஒரு நண்பனாக தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்ததாகவும் கூறி இருந்தாராம். இதுவரை அழாத சூர்யா அந்த மெயிலை பார்த்ததும் கண் கலங்கியதாக கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |