பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் விண்வெளி வரை கால்தடத்தை பதித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பெண்கள் தங்களுடைய திறமைகளின் மூலம் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக சாதித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் பாகுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி பெண்தள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும், தங்களுடைய பணியை சிறப்பாக செய்தல் மற்றும் குழு அமைத்தல் போன்றவற்றில் ஆண்களை விட சிறப்பாக செயல்படுகின்றனர்.
அதன் பிறகு கருப்பின பெண்கள் வெள்ளை நிற பெண்களை விட வேலை பார்க்கும் இடத்தில் அதிக அளவில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் ஆண்கள் தங்களுடைய குழுக்களில் வெள்ளை நிற பெண்களை சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் கருப்பின பெண்களிடம் பாகுபாடு காட்டுவதால் அவர்கள் பெருமளவு சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதே நேரம் கடுமையான கேலி மற்றும் கிண்டல்களுக்கும் கருப்பின பெண்கள் ஆளாகின்றனர். ஆனால் கடந்த வருடத்தை விட பெண்கள் தங்களுடைய உரிமைகள் மற்றும் மரியாதைக்காக அதிக அளவில் போராடுகின்றனர். எனவே நிறுவனங்கள் நன்றாக வேலை பார்க்கும் பெண் மணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவர்களுக்கு வெகுமதி அளித்து கௌரவமான பணியையும் வழங்க வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே பெண்களால் ஒரு நிறுவனத்தில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், எவ்வித தொந்தரவும் இல்லாமல் வேலை பார்க்க முடியும். இதனையடுத்து பல நிறுவனங்களில் ஆண்கள் தான் உயர்வான பதவிகளில் இருக்கின்றனர். ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பெண்கள் குறைந்த அளவிலேயே உயர் பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நிலைமை எப்போது மாறும் என்று தெரியவில்லை.
பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய கால் தடத்தை பதித்து சாதனை புரிந்தாலும் ஆண்களுடனான பாகுபாடு தற்போது வரையிலும் நிலவத்தான் செய்கிறது. இந்த பாகுபாடுகள் முற்றிலும் கலைந்தால் மட்டுமே பெண்களால் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். அமெரிக்காவில் உள்ள பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆண்கள்தான் உயர்மட்ட பதவிகளில் அதாவது மேலாளர் பதவிகளில் இருக்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களில் குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பிறகு நான்கில், மூன்று பெண்கள் தங்களுடைய வேலையிலிருந்து விலகிவிடலாம் என்று கருதுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகிறது.
இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு உயர்மட்ட பதவிகளை வழங்காதது தான். பெண்கள் ஆண்களை விட வலிமையான தலைவர்களாக உருவாகி வந்தாலும் சில நிறுவனங்கள் அதை அங்கீகரிப்பதில்லை. ஒரு பெண் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்றால் ஆண்களால் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அதை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. மேலும் ஒரு நிறுவனமானது பெண்களின் திறமைகளை கண்டறிந்து அவற்றை முறையாக அங்கீகரித்தால் மட்டுமே ஆண்களை எதிர்த்து பெண்கள் தைரியமாக போராடி தங்கள் வேலையில் அவர்களால் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடியும்.