Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் வழிமறிச்சான் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு 2 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் பூச்சிகடியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக மகனை அழைத்துக்கொண்டு கந்தசாமி அவரது உறவினரான குமரய்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு ஊசி போட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்திற்கு எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறுவன் ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் கந்தசாமி மற்றும் குமரய்யா காயங்களுடன் பரமக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்திபனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி கார் டிரைவரான பட்டணம்காத்தான் பகுதியில் வசித்தும் அஸ்வின் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |