கார் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் வசித்து வந்த முருகானந்தம்(44) தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் பலத்தகாயமடைந்த முருகானந்தத்தை மீட்டு அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முருகானந்தம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.