கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் காளீஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் இருசக்கர வாகனத்தில் கொத்தங்குளத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் காரில் வந்துகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த வாலிநோக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.