கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குமாரமங்கலம் தெற்கு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடத்தில் வேளாண்மை உதவி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பதுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் ரம்யா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.