இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் தனது நண்பரான மகேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஐயப்பனின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.