Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

கார்-இருசக்கர வாகனம் மோதியதில் டாஸ்மார்க் கடை விற்பனையாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி புதூரில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பவர் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பாப்பிநாயக்கன்பட்டி அருகே சென்ற பொது பின்னால் வந்து கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சதீஷ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சதேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நல்லிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |