Categories
உலக செய்திகள்

கார் ஓட்டுனருடன் திருமணம்…. கோடீஸ்வர பெண்…. எடுத்துள்ள முடிவு…!!

கோடீஸ்வர இளம்பெண் தன் கார் ஓட்டுனரை திருமணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சவுதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வர பெண் Sahoo bint abdullah al-mahboob. இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு மக்கா மதினாவிலும் அதிகப்படியான சொத்துக்கள் உள்ளன. மேலும் பிரான்ஸ் போன்ற சில நாடுகளிலும் இவருக்கு சொத்துக்கள் உள்ளதாம். இந்நிலையில் இவர் தன் கார் ஓட்டுநரான பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவலாகி வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக இவர்களின் திருமணம் மிக எளிமையாக நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்களது திருமணம் பற்றிய தகவல் மணப்பெண் மற்றும் மணமகன் இருவரது சார்பிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |