பல்வேறு மாநிலங்களில் கார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 11 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
கோவை மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதிகள் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பதிவு எண் இல்லாமல் வந்த காரினை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயன்றனர். அப்போது காரில் இருந்த 6 பேரில் 3 பேர் தப்பி ஓடினர். பின்னர் பிடிபட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுக்கரையை சேர்ந்த சக்தி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜா மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 6 பேரும் பல இடங்களில் கார் கடத்தலில் ஈடுபட்டதும் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவியை உடைத்தெறிந்து பல பேரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்த 11 சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.