75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார் கடனுக்கான செயல்பாட்டு கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கார் வாங்கும்போது அதனுடைய முழு தொகையில் சுமார் 75 சதவீதத்தை கடனாக வாங்கிக் கொள்ளலாம். யோனா ஆப் மூலமாக கார் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கான வட்டியில் 2.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது .நகை கடன் வாங்குபவர்களுக்கு 6.7 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. யோனா ஆப் மூலமாக கடனுக்கு விண்ணப்பித்தால் முழு பிராசஸிங்க் கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தனிநபர் கடன், பென்ஷன் வாங்குபவர்களுக்கும் பிராஸசிங் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.