இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் வாகன கடன் வழங்கி வருகின்றன.அவ்வாறு வாகன கடன் வாங்க திட்டமிட்டுள்ளோர் கடன் வாங்குவதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை பார்த்த பிறகு கடன் வாங்குவது நல்லது. அதன்படி இந்தியாவில் குறைந்த வட்டியில் கார் கடன் வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்களை இதில் பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கார் கடனுக்கு மிக குறைந்த வட்டியை வழங்குகிறது. அதன்படி 10 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி 7.65 சதவீதம் மட்டுமே. மாதந்தோறும் செலுத்தக்கூடிய இஎம்ஐ 15 ஆயிரத்து 412 ரூபாய்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி கார் கடன்களுக்கு 7.9 சதவீத வட்டியில் வழங்குகிறது.
எச்டிஎப்சி வங்கி 10 லட்சம் ரூபாய் கார் கடனை 7.95 சதவீதம் வட்டியில் வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் 15,561 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும்.
அரசிற்கு சொந்தமான பேங்க் ஆப் பரோடா வங்கி கார் கடனுக்கு 7.95 சதவீதம் வட்டி வழங்குகிறது
ஐ சி ஐ சி ஐ வங்கி எட்டு சதவீத வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கால் கடன் வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி 8.15 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்குகிறது. 15 ஆயிரத்து 661 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும்.