மத்திய பிரதேசம் மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் விதமாக ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரின் உள்ளே பயணம் செய்பவர் யார் என்பதை தெரியாத விதமாக மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட அங்கு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காரை நிறுத்தி அதை ஒட்டி வந்த உரிமையாளரான 31 வயது நபரிடம் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கிழிக்குமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்டிக்கரை கிழிக்க மறுத்த கார் உரிமையாளர் போலீஸ் கான்ஸ்டபளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளை அந்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார். சாலையில் கிடந்த கல்லை கொண்டு கான்ஸ்டபிள் மீது தாக்கியுள்ளார் அதன் பின் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேலும் சில போலீஸர் வருவதை பார்த்து அந்த நபர் தன் தலையை கார் கார் கண்ணாடியில் மோதி தானும் தாக்கப்பட்டது போல் நடித்து இருக்கின்றார். ஆனால் இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்திருக்கின்றன இதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீச கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்தி கார் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.