Categories
மாநில செய்திகள்

கார் கவிழ்ந்து கோர விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியை சேர்ந்தவர் கமலக் கண்ணன் (45). இவர் திண்டுக்கல்லில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி லதா (40). இந்த தம்பதியினர் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இதற்காக லதாவின் தாய் வேம்பு (65), அண்ணன் திருவாரூரில் வசித்து வரும் ராமச்சந்திரன் (44), கமலக் கண்ணனின் சித்தியான கோவையை சேர்ந்த மணிமேகலை (65) போன்றோருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் திண்டுக்கல்லிலிருந்து காரில் சென்னை புறப்பட்டனர். அங்கு வேறு ஒரு உறவினரை அழைத்துக்கொண்டு சாய்பாபா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையில் காரை கமலக்கண்ணன் ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் இன்றுஅதிகாலை சுமார் 5:30 மணிஅளவில் பெரம்பலூர் விஜயகோபாலபுரம், நாரணமங்கலம் இடையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சாலையில் தாறுமாறாக ஓடி நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர். இதையடுத்து அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புகுழுவினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். எனினும் கமலக்கண்ணன், அவரது மனைவி லதா மற்றும் லதாவின் தாய் வேம்பு போன்றோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பின் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ராமச்சந்திரன், மணிமேகலை போன்றோர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை நேரமாக இருந்ததால் டிரைவர் அயர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |