கார் கியர் மாற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்த தம்பதியினர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தானில் வசித்து வரும் பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு அவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். பணக்கார வீட்டு பெண்ணான அவர் கார் ஓட்டும் பயிற்சி ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லாடியாக இருந்திருக்கின்றார். இந்த நிலையில் பயிற்சி கொடுத்த போது அவரது கியர் மற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண் அவர் மீது காதலில் விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த வேலையாக அவர் தன்னுடைய வீட்டில் காதலைப் பற்றி தெரிவித்து அந்த கார் டிரைவர் திருமணம் செய்துள்ளார்.
இது தொடர்பாக டெய்லி பாகிஸ்தான் என்ற செய்தி தளத்திற்கு பேட்டி அளித்துள்ள அந்த காதல் ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்துள்ளனர். அப்போது அவர் கியர் மாற்றும் செயல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேலும் காதல் கணவருக்காக பாட்டு பாட சொல்லி கேட்ட போது அந்த பெண் ரிஷி கபூர் டிப்பில் கபாடியா நடித்த பாபி படத்தில் இடம் பெற்ற ஹூம் தும் ஏக் காம்ரே மேயின் என்ற பாடலை அந்தப் பெண் பாடியுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் கணவர் லைட்டா ஸ்வரம் குறையுது என சொல்லி கிண்டல் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த காதல் தம்பதியினரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.