Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கார்-சரக்கு வேன் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்….. அரியலூரில் கோர விபத்து…!!

கார் மற்றும் சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கைகளத்தூர் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அதன்பின் குடும்பத்தினர் காரில் மீண்டும் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் சாலையின் இருபுறமும் விவசாய கழிவுகளை எரித்து கொண்டிருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.

இதனால் செல்லதுரையின் காரும் அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |