தனது காரில் காவலர் ஒருவர் அடிபட்ட ஆந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் பறக்க முடியாமல் தவித்த ஆந்தையை சிகிச்சைக்காக தனது காரில் வைத்து கூட்டி செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. விலங்குகள் பறவைகள் பற்றிய செய்திகள் எப்போதுமே நம் மனதுக்கு நெருக்கமானவையாக இருக்கும். அதுபோலதான் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது காரின் பின் சீட்டில் ஒரு ஆந்தையை அமர வைத்துள்ள புகைப்படமும், அது சீட்டில் அழகாக அமர்ந்துள்ள படமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அந்த காவலர் பணியில் இருந்தபோது ஒரு குகைக்கு அருகே பறக்க முடியாத நிலையில் இருந்த ஒரு ஆந்தையை பார்த்துள்ளார் உடனே அந்த ஆந்தையை மீட்டு “விங்ஸ் ஆப் டான்” மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளர்.லக்கி என்று பெயர் கொண்ட அந்த ஆந்தைக்கு தலையில் அடிப்பட்டு இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்த பிறகு விரைவில் அந்த ஆந்தை வானில் பறக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஹாம்ப்சைர் மாநில காவல்துறையினர் வெளியிட்ட இந்த புகைப்படங்களுக்கு தற்போது பலரும் ஸ்வாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.