சென்னையை அடுத்த ராம்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் சுப்பையா சண்முகம் வசித்து வந்தார். இவர் கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்தார். மேலும் இவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராக இருந்தார்.
இந்நிலையில் சுப்பையா சண்முகத்திற்கு கார் நிறுத்துவது தொடர்பாக அதே குடியிருப்பில் வசித்து வந்த வயதான பெண்மணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் கடந்த 2020 ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆகம்பாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு 2 வருடங்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த டாக்டர் சுப்பையவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன் அஜர்செய்தார். பின்னர் சுப்பையவை வருகிற 31 தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.