அயர்லாந்து தங்களது நாட்டுக்கு விளையாட அழைப்பு விடுத்த நிலையில், சஞ்சு சாம்சன் அதனை மறுத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், சிறப்பான கேப்டனாக தனது அணியை கடந்த 2022 ஐபிஎல்லில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றுள்ளார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பர் பேட்டரான சாம்சன் அண்டர் 19 காலத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார்.. 2015 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை வெறும் 16 டி20 போட்டி மற்றும் 11 ஒரு நாள் போட்டி என மொத்தம் 27 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.. 7 ஆண்டுகளில் குறைந்த வாய்ப்பை மட்டுமே பிசிசிஐ வழங்கி ஏமாற்றியுள்ளது. ஒரு தொடரில் வாய்ப்பு கொடுத்தால் அடுத்த தொடரில் அவரை கழட்டி விடுகிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவரை களம் இறக்காமல் கரையில் உட்கார வைத்து வருகிறது பிசிசிஐ. சாம்சனை தொடர்ந்து புறக்கணித்து வரும் பிசிசிஐ அவரை திறமையற்ற வீராக நினைக்கின்றதோ என்னவோ தெரியவில்லை.
சமீபத்தில் நடந்த முக்கிய தொடரான ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தும் அவர் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் வாய்ப்பு வழங்கியது. அதில் அவர் சிறப்பாக ஆடி 38 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த 2 மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டியில் வாடிப்பு வழங்கவில்லை. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் அவரை இந்திய அணியில் இருந்து விலகுமாறு ரசிகர்கள் சமீபகாலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் அணி சாம்சனுக்கு ஒரு வாய்ப்பைவழங்கியுள்ளது. அதாவது, சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் வழங்கினார், மேலும் சஞ்சு அணியின் தலைவராக இருப்பார் என்றும் அதன் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்பார் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியதாவது, “அவர் (சாம்சன்) எங்கள் தேசிய அணியில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் விளையாட அனுமதிப்போம். அவர் மிகவும் ஈர்க்கக்கூடிய பேட்டர் மற்றும் அரிய திறமைசாலிகளில் ஒருவர். அவருக்கு எங்கள் தேசிய அணியில் இருந்து போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். எங்களது நாட்டு குடியுரிமை, கார், வீட்டு வசதி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ) நிகரான சம்பளம் என அனைத்தையும் வழங்குவோம்.
எங்கள் அணிக்கு அவரைப் போன்ற ஒரு கேப்டன் மற்றும் பேட்டிங் தேவை. இந்திய அணி அவரை கவனிக்கவில்லை என்றால், அவர் எங்களுடன் சேரலாம், நாங்கள் அவரை மதிக்கிறோம் மற்றும் அவரை ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வைக்கிறோம், ”என்று கூறினார். கேரளாவில் பிறந்த சாம்சன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற வேண்டும். U19 WC இன் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் இதேபோன்ற பாதையில் சென்று இப்போது அமெரிக்காவில் ஆடி வருகிறார்.
இதையடுத்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பிற்கு பதிலளித்த சஞ்சு, “மிக்க நன்றி” என்றார். சில சமயங்களில் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, தற்போது எனது தேர்வாளரின் அழைப்புக்காக நான் இங்கே அமர்ந்திருக்கிறேன், ஆனால் எனது கனவு இன்னும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும், நான் வேறு எந்த நாட்டிற்காகவும் விளையாட மாட்டேன். “முதலில், என்னை பரிசீலித்ததற்காக அயர்லாந்தின் கிரிக்கெட் தலைவருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஆனால் அவரது வாய்ப்பை என்னால் ஏற்க முடியாது. இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்காக எனது கிரிக்கெட்டை தொடங்கினேன்.
நான் வேறு எந்த நாட்டிற்காகவும் விளையாட விரும்பவில்லை அல்லது வேறொரு நாட்டிற்காக விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்த வாய்ப்பை என்னால் ஏற்க முடியாது, அயர்லாந்து கிரிக்கெட் தலைவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணியில் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ஆனால் நான் கடினமாக உழைக்கிறேன், தன்னம்பிக்கையுடன் இருப்பேன், சில சமயங்களில் அணியின் காம்பினேஷனில் விளையாடும் XI இல் உங்கள் இடத்தை அனுமதிக்காது, அதற்காகக நான் சோகமாக இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. என்று பெருந்தன்மையுடன் பேசினார்.
28 வயதான அவர் சமீபத்தில் கேரளாவுக்காக முதல் 2 ரஞ்சி டிராபி ஆட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆயினும் கூட, சஞ்சு சாம்சன் ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Here not given chances baiya . Please paly on Ireland team 🙏. I'm big fan of u . pic.twitter.com/DDnVidtpzF
— Naveen Kumar (JSP) (@naveenm495) December 12, 2022