திடீரென காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
நீங்கள் கார் ஓட்டும் போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் முதலில் கார் ஓடிக் கொண்டிருக்கும்போது சாவியை எடுக்க கூடாது. ஒருவேளை நீங்கள் சாவியை எடுத்து விட்டால் காரின் ஸ்டியரிங் லாக் ஆவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக உங்களால் காரை கண்ட்ரோல் செய்ய முடியாது. அதன்பிறகு காரில் இருக்கும் அனைத்து எமர்ஜென்சி லைட்களையும் ஆன் செய்துவிட்டு, ஹார்ன் அடித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
இதனால் உங்கள் காருக்கு முன்னாடி செல்பவர்கள் உங்களுடைய காரில் பிரேக் பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்வார்கள். இதனையடுத்து கியரை மெதுவாக போட வேண்டும். அதாவது காரின் வேகத்திற்கு தகுந்தாற்போல் கியரை போட வேண்டும். இறுதியாக ஹேண்ட் பிரேக்கை முறையாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ஹேண்ட் பிரேக்கை போடக்கூடாது. அப்படி செய்தால் கார் கவிழ்ந்து விடும். இதனால் காரின் வேகம் குறைந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை போட வேண்டும். இதன் மூலமாக கார் மெதுவாக சென்று நின்று விடும்.