Categories
தேசிய செய்திகள்

கார் புக்கிங்கை கேன்சல் செய்த பெண்…. ஆபாச வீடியோ அனுப்பி பலிவாங்கிய ஓட்டுனர்….!!

மும்பையில் கேப்ஸ் சவாரியை ரத்து செய்த பெண்ணை பழி வாங்கும் விதமாக ஆபாச வீடியோ அனுப்பிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் பயணத்திற்காக ஒரு கேப் நிறுவனத்தில் வாகனத்தை புக் செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஏசி பழுதடைதிருந்தது மற்றும் அதிக கட்டணம் கேட்டதற்காக அந்தப் பெண் அந்த புக்கிங்கை ரத்து செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கேப்ஸ் நிறுவனத்தின் 18 வயது ஓட்டுநரான உத்தவ் குமார் பிரமோத் சுக்லா. அந்த பெண் மற்றும் அவரின் கணவருக்கு தொடர்ந்து செல் போனில் தொந்தரவு கொடுத்ததோடு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களயும் அனுப்பியுள்ளார். இவை அனைத்தையும் வெவ்வேறு எண்களில் இருந்து அனுப்பியுள்ளார் அந்த ஓட்டுநர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மும்பை லோக்மான்ய திலக் மார்க் காவல்துறையினர் பீகாருக்கு தப்பி ஓடிய அந்த ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |