Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா – மகள் உயிரிழப்பு”… போலீசார் வழக்குப்பதிவு…!!!

கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா-மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் அருகே இருக்கும் சந்தை ஊரை சேர்ந்தவர் வக்கீல் மகாலிங்கம். இவர் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரில் மனைவி பழனியம்மாள்(வக்கீல்), மகள் சாதனா, மகன் எஸ்வந்த், மற்றும் உறவினர் விஸ்வநாதன், தமிழ்செல்வி, கிருத்திகா உள்ளிட்டோர் பயணம் செய்தார்கள். இந்த காரானது சுங்கச் சாவடியை கடந்து சென்றபோது தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மோதியதால் காரின் பின் பகுதி சேதமடைந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். காரில் பயணித்த மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர். போலீசுக்கு உடனடியாக தகவல் அளித்த போது விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியில் சாதனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அம்மா மற்றும் மகள் இருவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |