கார் மீது சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குண்டூர் பகுதியில் ஓட்டுநரான முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் அண்ணா பாலம் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராதவிதமாக சாய்ந்து காரின் முன் பகுதி மீது விழுந்தது. இந்த விபத்தில் முத்துவேல் உள்பட இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் காரின் முன்பகுதி சேதமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.