Categories
தேசிய செய்திகள்

கார் மீது பேருந்து மோதி 11 பேர் பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!

மத்தியப்பிரதேசம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் போலீஸ் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இவற்றில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அத்துடன் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பெதுல் சிமலா பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பெதுலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இருப்பதாவது “மத்தியப்பிரதேசம் பெதுலில் நடைபெற்ற கோர விபத்தில் 11 பேர் இறந்த தகவலறிந்து வேதனையடைந்துள்ளேன்.

உயிரிழந்த குடும்பத்தினருக்கு என் ஆழந்த இரங்கல். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மேலும் விபத்தில உயிரிழந்தவர்களின் குடுபத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |