டெல்லி போலீசார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. அந்த கார் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் இழுத்துக் கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனமானது சாலையில் இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்நிலையில் பயங்கர விபத்தின் போது இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனையடுத்து இரு சக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதியதில் திடீரென மின்கம்பம் சரிந்து விழுந்தது. அந்த மின் கம்பம் இருசக்கர வாகன ஓட்டியின் தலையில் விழுந்தது. ஆனால் ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் மின்கம்பம் தலையில் விழுந்தும் அந்த நபருக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து சாலையின் அருகே இருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய ஒரு வாகன ஓட்டி ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பிய வீடியோவை டெல்லி போலீசார் வெளியிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு கூறியுள்ளனர்.
God helps those who wear helmet !#RoadSafety#DelhiPoliceCares pic.twitter.com/H2BiF21DDD
— Delhi Police (@DelhiPolice) September 15, 2022