மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சோளப்பட்டு கிராமத்தில் முருகப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் ஸ்டாலினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.