கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சாப்ட்வேர் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். அமெரிக்காவில் வேலை பார்த்த சுரேஷ் தற்போது விடுமுறையில் சிவகாசிக்கு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர்களான தொழிலதிபர்கள் டேனியல், மோகன் ஆகியோருடன் உறவினர் வீட்டு விசேஷ விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் மாத்தூர் ரிங் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக முதல் தனியார் பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் என மொத்தம் 6 பேர் காயம் அடைந்தனர். இதனை அடுத்து படுகாயமடைந்த 6 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அருண், டேனியல் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான சிவகுமார் என்பவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.