கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது பேருந்து மோதியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.