கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுப்பிரமணியன்(59)- நித்யா தேவி(46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்ணாமலை என்ற மகன் உள்ளார். இவருக்கு சிந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தூத்துக்குடியில் இருக்கும் தனது மருமகள் சிந்தியாவை பார்ப்பதற்காக நித்யா தேவி, தனது மகள் மலையரசி(27) பேரக்குழந்தைகள் சிவகுரு(4),குருதேவ்(2) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார.
இந்த காரை சூரிய பிரகாஷ் என்பவர ஒட்டி சென்றுள்ளார். இவர்கள் சிந்தியாவை பார்த்துவிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி வேலாயுதபுரம் விலக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வேகமாக சென்ற மினி லாரி திடீரென நான்குவழிச் சாலையின் மறுபக்கம் வாய்ந்து கார் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் படுகாயமடைந்த நித்யா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூரிய பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மினிலாரி ஓட்டுநரான சகாய சுந்தர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.