Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. “இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவர்”….சேலத்தில் பரபரப்பு…!!!!

தலைவாசல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை பரூக் என்பவர் ஓட்டி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் அடுத்திருக்கும் நத்தக்கரை பிரிவு ரோட்டில் லாரி சென்றது. அப்போது அவ்வழியாக ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி எதிர்ப்பாராவிதமாக மோதியதில் கார் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயர்த்தினார்கள்.

இந்த நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பை உடைத்து சாலையின் மறுபக்கத்திற்கு சென்று சாலையோரத்தில் இருக்கும் ஆலைக்குள் புகுந்து ஆங்கிருக்கு வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து நின்றது. இந்த லாரியின் டிரைவர்களான பரூக் மற்றும் துறைக்கண்ணன் உள்ளிட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இந்த விபத்து நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்

Categories

Tech |